சுதந்திரம்

எது சுதந்திரம் ?
காலையில் பத்து மணிக்கு எழுந்து பல் துலக்காமல் காப்பி குடிப்பதா சுதந்திரம் ??
நடு இரவு ஆனாலும் கைப்பேசியில் அரட்டை அடிப்பதா சுதந்திரம் ? ஆணும் பெண்ணும் அட்டை போல் ஒட்டிக்கொண்டு வாகனத்தில் திரிவதா சுதந்திரம் ?? பள்ளிகளில் தாய் மொழி பேசினாலே அபராதம் இதுவா சுதந்திரம்?இரண்டு ரூபாய்க்கு தேசிய கொடியை வாங்கி சட்டையில் குத்திக்கொண்டு சுதந்திரம் பெற்று விட்டோம் என மார்தட்டி கொள்வதா சுந்தந்திரம் ?? மேடை பேசுக்காக மட்டும் தியாகிகளை புகழ்வதில்லை சுதந்திரம்.......
என்று ,, இராமேஸ்வர மீனவன் ஒருவன் கடலுக்கு சென்று திரும்பி வந்து தன் மனைவியை பார்த்து புன்முறுவலிட்டு தன் குழந்தைக்கு முத்தமிடுகிறானோ அதுவே சுதந்திரம் ...........!!!

எழுதியவர் : செல்வி பாண்டியன் (17-Jul-11, 2:24 pm)
சேர்த்தது : selvi pandian
பார்வை : 364

மேலே