வாழ்க்கை
நீரின்றி புவி நிலைக்காது!
நீரின்றி என் வாழ்வு செழிக்காது!
என் மெய் என்றும்
உன் வசப்படும் என்பது மெய்!
உளியால் செதுக்கினால் சிலையாகுமே கல்!
பிழையில்லா வாழ்விற்க் கு நீதிபோதனைகளை இளமையில் கல்!
புல்லாங்குழலில் காற்று நுழைந்து இசை வடிக்க
அவள் பூங்குழலில் காற்று நுழைந்து நடனம் பயில்கிறது!
சாதி எனும் அரக்கனை குழி தோண்டி புதைத்து
இந்தியாவில் சகோதரத்துவத்தை நிலைநிறுத்த சாதி!