சேற்றில் மலர்ந்த செந்தாமரை

எவ்விடமும் இருக்கும் நல்ல குணங்கள்
எதையும் தாங்கும் இரும்பு மனங்கள்
சேற்றில் தானே செந்தாமரை மலரும்
குடிசையில் கூட தலைவன் பிறப்பான்

நிறம் கொடுத்தது பெற்றோர் தானே
கல்வி கொடுத்தது பள்ளி தானே
சிறப்பான அறிவு எங்கே இருந்தாலும்
சீக்கிரம் வெற்றி கிட்டியே தீரும்

கடலுக்குள் குதிக்க முத்து கிடைக்கும்
அறிவுக் கடலாலே வெற்றி கிடைக்கும்
பணமே ஆளும் நிலை வந்தபோதும்
சிலரது அறிவு ஜெயிக்க வைக்கும்

ஏழ்மை நிலையென வருந்திட வேண்டாம்
மாற்றம் சீக்கிரம் கதவைத் தட்டிடும்
வாழ்க்கை நதியினில் ஆடி மகிழலாம்
நிம்மதி மட்டுமே சேர்த்து வைக்கலாம்

உள்ள புத்தியை நன்றாய் தீட்டிட‌
நல்ல வேலையும் தானே வந்திடும்
செல்லப் பிள்ளையாய் எல்லாருக்கும் ஆகிட‌
வாழ்வில் உச்சம்தான் ஏதுமில்லை மிச்சம்தான்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (21-May-17, 7:52 pm)
பார்வை : 346

மேலே