மானுடம் தோற்றது
மானுடம் தோற்றது பணத்தின் முன்பு
இன்றைய வாழ்விற்கு பணமே பிரதானம்
என நினைக்கத் தொடங்கிவிட்டான் மனிதன்
அதனால் தான்
குடும்பம் விட்டான் உறவு விட்டான்
குழந்தை விட்டான் கிராமம் விட்டான்
நாட்டை விட்டான் ஓடி விட்டான்
சேர்க்கப் போனாம் சோர்ந்து போனான்
ஓட்டம் ஓட்டம் கடைசி வரைக்கும்
மனிதம் பற்றி நினைக்க வில்லை
கைகள் ஏந்தி நிற்போர் முன்பு
காசைக் கரியாய் ஆக்கும் மனிதம்
வயிற்றுப் பசியால் அழுவோர் முன்பு
தின்று கொழுத்து தொந்தி வளர்ப்பான்
பாட்டி இடத்தில் பேரம் பேசி
பெரியக் கடையில் சோரம் போவான்
பணத்தை நன்றாய் பிடித்துக் கொண்டான்
பணமும் அவனைப் பிடித்துக் கொண்டது
இனியும் இவனை விடுமா பணமே
பணமே விட்டாலும் இவனா விடுவான்
மானுடம் இங்கே எங்கும் இல்லை
பணத்தை வணங்கும் கூட்டம் முன்பு