சில நொடிகளுக்கு முன்பாக
பிரசவத்தில் பிறந்த மழலை போல
என் தோட்டத்தின் செடியில்
பனி துளிகள் படர
பூத்திருந்த பூவை பறித்து
உச்சி முகர்ந்தேன்
அதன் சுகந்தம்
சில நாழிகை மதி மயக்கி நிகழ் வர
அப்பூவை என் அகத்தவளின்
கூந்தலுக்குள் நுழைத்தேன்
இப்போது வளியிடம்
கதறும் அந்த தாய்செடியின்
அழுக்குரல் என் செவிகளை
எட்டவேயில்லை....✍

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (24-May-17, 2:51 pm)
பார்வை : 84

மேலே