காதல் எச்சம்
நீ
தொலைத்த
கைக்குட்டையில்
துவங்கியது நம் காதல் ...
நீ
படித்து கொடுத்த
புத்தகத்திலே
புதிப்பித்தது நம் காதல் ....
நீ
விட்டு சென்ற
எழுதுகோலில்
எழும்பி நின்றது நம் காதல் ...
இப்படி
எஞ்சி விட்ட
ஒவ்வொன்றிலும்
உயிர் தங்கிய என் காதல் ...
மரித்துபோகுமா என்ன ??
நீ நீட்டிய
உன் திருமண அழைப்பிதழ் பார்த்து ...
இன்னும்
எஞ்சிய நினைவுகளோடும் ...
கொஞ்சிய நினைவுகளோடும் ...
காதலை கருவாய்
சுமந்து கொண்டுதான் இருக்கிறேன் ...