மேலே கீழே

மலை உச்சியில்
நிற்கும் விழிகள்
அடிவாரத்தில் பரவியிருக்கும்
பச்சை புல்வெளியை
ரசித்து பார்க்கிறது
அடிவாரத்தில் இருக்கும்போது
அதே விழிகள்
மலை உச்சியை
ஏக்கத்தோடு அண்ணாந்து
பார்த்து கொண்டிருக்கிறது
இது தான் வாழ்க்கையோ

இல்லாததை மட்டும்
நினைத்து கொள்கிறது
இறுக்கமான மனசு
இருப்பதை ரசித்துவாழ
இதங்கள் எத்தனையோ
இருப்பதை உணராமலே

எழுதியவர் : யாழினி sdv (24-May-17, 9:29 pm)
Tanglish : mele keeze
பார்வை : 174

மேலே