ஏன் எனை தவிக்க விட்டு சென்றாய்
ஆணவத்தின் உச்சத்தை நான் வெளியிட
அன்பை உச்சத்தை நீ வெளியிட்டாய்...
கோபத்தின் உச்சத்தை நான் வெளியிட
சாந்தத்தின் உச்சத்தை நீ வெளியிட்டாய்...
இம்சையின் உச்சத்தை நான் வெளியிட
அகிம்சையின் உச்சத்தை நீ வெளியிட்டாய்...
உன் அன்பால் பண்பால் எனை மனிதனாக்கி வென்றாய்
தவறுகள் உணர்ந்தபின் ஏன் எனை தவிக்க விட்டு சென்றாய்??!!!