இயற்கையும் நாமும்

பச்சை மலைகள் தேடி சென்றேன்
மலைகள் கண்டேன் பசுமைக் காணவில்லை
காடுகள் அழிந்தன பசுமைப் போனது
மலை அடிவார நேற்றைய
குக் கிராமங்கள் இன்று காணாமல் போயின
அடிவார கற்களெல்லாம் வெட்டி எடுக்கப்பட்டு
சிலர் சூறையாடி பெரும் செல்வம் திரட்டினார்கள்
இப்போது மலை அடிவாரம் 'குவாரி' குளங்கள் ,
நீர்த்தேக்கங்கள் ஆயின
காடுகள் இல்லா பச்சைமலைகள்
களை இழந்த பழுப்பு மலைகள் இன்று
சிறகொடிந்த ஜடாயுக்கள் !
மலைச்சரிவில் சில ஓடைகள், நதிகள் உற்பத்தி
காடுகள் அழிக்கப்பட ,திடீர் மழை வந்து சேர
மலைச்சரிவை தாக்க , நிலச்சரிவு !
மனிதன் இயற்கையோடு இணையாது
நடத்தும் அத்துமீறல் அதன் விளைவு !


வைகறையில் நதிக்கரை
தேடி சென்றேன் நதியோடு உறவாட
அய்யகோ நதியின் கரையைக் காணேன்
மணல் திட்டை ராக்கத லாரிகள்
மறைத்த வண்ணம் நதி மணலெல்லாம்
சூரைப்போகுது தங்கமணலோ என்ன
இப்படியே நதி மணல் காணாமல் போனால்
நதிக்கரை இல்லாமல் போய்விடுமோ ?
இது இயற்க்கை அத்துமீறல் -இதை
யார் தடுப்பாரோ தெரியவில்லை


இப்படியே வெய்யலின் கொடுமையிலிருந்து
சிறிது விடிவு காண -கடற்கரை நோக்கி சென்றேன்
நம்புங்கள் நான் சொல்வதை -அங்கு
கடற்கரை மணலும் பெருவாரி மறைக்கப்பட்டு
பற்பல உணவு கடைகள் அதன் மேல் !
தூய கடல் காற்றின் வாடை அங்கு இல்லை
வித விதமான அறுசுவைகள் வாசனை
காற்றில் கலந்து போனது ! காற்றே உன் வாடை
எங்கே எங்கே கேள்விக்குறியானது


எங்கே போகின்றான் மனிதன்
எதை நோக்கி -இயற்கையை எதிர்த்து
சாகசம் புரியவா -அது என்றும் நடக்காது
அழிவை நோக்கி செல்கின்றான் மனிதன்
இப்போதே விழித்துக்கொண்டால்
இதை சிறிதேனும் தட்டி நிறுத்தலாம்
சில காலம் வாழ்ந்திடலாம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-May-17, 12:00 pm)
Tanglish : iyarkaiyum naamum
பார்வை : 661

மேலே