வலிகள் - சகி

இருளாய் நிறைந்திருக்கும்
என்வாழ்வில் ஒளிதரும்
உறவு நீயாகவில்லை.....

ஏமாற்றம்கண்ட எனது
காதல் உன்னால் மீண்டும்
ஏமாற்றத்தில் கருகியது .....

காதலென்பது இருமனங்களின்
எண்ணங்கள் இணைந்து
உணர்ந்து புரிதலுடன்
வாழ்வதுதானே.....

உன்வார்த்தைகளின்
வலிகளில்
எனதுவாழ்க்கை மரணப்பிடியில் ......

நிச்சயம் நீ
கலங்கப்போவதில்லை.....

என்மீதான காதல்
உண்மையுமில்லை ....
உணர்வுமில்லை .....
புரிதலுமில்லை ......

விலகிவிட்டேன்
மொத்தமாய் ....

தனிமை என்
வாழ்வின் துணையாக ......

எழுதியவர் : சகி (26-May-17, 12:30 pm)
பார்வை : 816

மேலே