மறக்க முடியாத உன் நினைவுகள் என்னில் 555

அன்பே...

என்னில் உன்னை நினைக்க
தெரிந்த எனக்கு...

உன்னை எளிதில்
மறக்கவும் தெரியும்...

நீ முதல்நாள் போலவே
முகம்திருப்பி சென்று இருந்தால்...

என்னோடு நீ
கைகோர்த்து பழகினாய்...

என் விரல் பிடித்து
நகம் கடித்தாய்...

உன்னை நான் தொடர்ந்த
போதெல்லாம் சொல்வாய்...

பிடிக்கவிலை என்று...

அப்போதெல்லாம் புன்னகையோடு
உன் பின்னால் வந்தேன்...

இன்று நீ சொல்லும்போது வலியில்
இதயம் வேகமாக துடிக்குதடி...

என்னை நீ
எளிதாக கடந்துவிட்டாய்...

உன் நினைவுகளை கடக்க
முடியாமல் நான் துடிக்கிறேனடி...

நித்தம் நித்தம் உன் நினைவில்
துடிக்கிறேனடி நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (28-May-17, 7:13 pm)
பார்வை : 2236

மேலே