உன்னை என்றும் நான் வெறுத்ததில்லையடி 555

உயிரே...

இதயம் உருகி நீ நின்ற நேரம்
மறந்துவிடுமா என் இதயம்...

நான் கனவிலும் உன்னை
காயப்படுத்த நினைத்ததில்லையடி...

உன் நினைவுகளின் பாரத்தில்
நான் எப்போதாவது வீசுகிற...

கவிஇதழ்கள் உன் கண்களில்
பட்டு வலித்தால்...

என்னை மன்னித்துவிடடி
எவனோ ஒருவனாக...

நீ செல்லும் பாதையில் உன்
பாதங்கள் நோகுமென்று...

என் கண்ணீர் துளிகளை
நிரப்பி வைத்துள்ளேன்...

உன் முகம்
கழுவிக்கொள்ள...

உன் புன்னகை விரும்பி
என் புன்னகையை மறைத்தாய்...

உயிரே உன் புன்னகை பூவிற்காகவே
என் இதயம் ஏங்குதடி...

என்னை நீ மறந்தாலும் உன்னை
நான் என்றும் மறப்பதில்லையடி...

பெண்ணே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (27-May-17, 7:26 pm)
பார்வை : 938

மேலே