காதல் போர்க்களம்
காதல் போர்
~~~~~~~~
கூர் விழி கொண்டு
வாள் வீசுகிறாய்
காதல் போர்க்களத்தில்....
இதயம் எனும்
மையப்பகுதியில்
செங்குருதி வெளியேற.....
அதை தொட்டு
உன் நெற்றியில் வெற்றி திலகமிட்டுக்கொள்கிறாய்....
அரசிற்கான போரில்
தோல்வி என்றால்
கவலை கொள்வேன்......
மனசிற்கான
போர் என்பதால்
காதல் கொண்டேன்....
🌹💐🌹🌹Samsu🌹💐🌹🌹