வைரவிழா நாயகர் கலைஞர்

விண்ணில் சூரியன் மண்ணில் கலைஞர்
தமிழன்னை ஈன்ற நிகரில்லா தலைமகன் !
பன்முக வித்தகரே தமிழின் அடையாளம் நீ
தமிழில் இமயமே தமிழர்களின் இதயம் நீ !
எழுத்தால் உலகின் உள்ளத்தைத் தொட்டவன் நீ
பேச்சால் வானத்தை வளைத்துப் போட்டவன் நீ !
சாதிமதமிலா சமத்துவபுரம் கண்ட பெரியார் நீ
சாதனைகள் பலபுரிந்த இணையிலா சூரியன் நீ !
அண்ணாவின் இதயத்தை இரவலாய் பெற்றவன் நீ
அண்ணின் கனவுகளை நனவாக்கிய மன்னன் நீ !
கவிஞர்கள் போற்றிடும் கவியுலக கம்பன் நீ
வையகம் வாழ்த்திடும் வாழும் வள்ளுவன் நீ !
மனிதனை மனிதனே இழுப்பதை ஒழித்தவன் நீ
தொழு நோயாளிக்கும் புதுவாழ்வு தந்தவன் நீ !
குடிசையை அகற்றி மாடியாய் மாற்றியவன் நீ
சமச்சீர் கல்வியை போராடி கொணர்ந்தவன் நீ !
சோதனை வேதனை தாங்கிய நெஞ்சம் நீ
தோல்வியே காணாத வெற்றி வேட்பாளன் நீ
உடன்பிறப்பை என்றும் உயிராக நினைப்பவன் நீ
உணர்வூட்டி அறிவூட்டி தமிழரைக் காப்பவன் நீ !
தேசிய அரசியலும் நேசிக்கும் தலைவன் நீ
செம்மொழி தமிழை சுவாசிக்கும் தமிழன் நீ
நாதியற்றத் தமிழனின் நம்பிக்கை நட்சத்திரமே
நானிலத்தில் வாழும் தமிழர்களின் நாடித்துடிப்பே !
இவ்வுலகம் உள்ளவரை வாழ்வாய் கலைஞரே
அதுவரை தமிழும் வாழும் அகிலமும் புகழும் !
வைரவிழா நாயகரே வாழ்வாங்கு வாழ்ந்திடுக
வையமே வாழ்த்திடும் எந்நாளும் உன்னை !
வாழ்க கலைஞர் ! வளர்க அவர்தம் தொண்டு !
பழனி குமார்
------------------------------------------------------------------------
அவரை வாழ்த்திட வயதில்லை என்பதால் வணங்குகிறேன் .
வாழ்க பல்லாண்டு கலைஞர் அவர்கள் .
பழனி குமார்
31 .5 . 2017
------------------------------------------------------------------------------
புகைப்படம் எடுத்தது 1985 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் .
அருகில் அமர்ந்திருப்பது எனது தாத்தா .
------------------------------------------------------------------------------