என்ன நிகழ்ந்தது எனக்குள்2

என்ன நிகழ்ந்தது எனக்குள்

தேன்கூட்டுக்குள்
அடைந்து கொள்ளும்
தேனிஈ போல
உன் தாடிக்குள்
ஒளிந்து கொள்ள
தோணுது எனக்கு

ஒருவேளை நீ மறுத்தால்
உன் கூந்தல் கோதும்
சீப்பாக மாறி
உன் பாண்ட் பைக்குள்
ஒளிந்து கொள்ள
வேண்டும்போல தோணுது

அடுத்த ஆடவரிடம்
கொஞ்சம் வெட்டி கொண்டு
தள்ளியே நிற்கும் நான்
எப்படி இப்படி
உன்னோடு மட்டும்
ஒட்டி கொள்கிறேன்

மேகங்கள் ஆயிரம் நகர
வானவில்லின் அழகில் மட்டும்
லயித்து நிற்பது போல
மன்மதன் ஆயிரம்
கடந்து வந்தும்
உன்னை மட்டும்
உள்வாங்குது உயிர்வரை
என் கண்கள்

என்ன நிகழ்ந்தது எனக்குள்
என்ற ஆராய்ச்சியில்
இப்போது நான்

நீ எல்லோரையும் போல என்னை
கடந்து செல்லவில்லை
நீ எல்லாவற்றையும் தாண்டி என்னில்
கலந்து சென்றிருக்கிறாய்

மதம் கொண்ட
யானையை போல
மனசு இப்போது
என்ன சொல்லியும் கேளாமல்
உன்னை மட்டும் தேடி
ஓட தொடங்குகிறது

எழுதியவர் : மண யாழினி (31-May-17, 1:47 am)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 146

மேலே