நல்ல பெயர்

நாக்கில் நஞ்சு வைத்திருந்தாலும்
நல்லபெயர் கிடைத்துள்ளது,
நல்ல பாம்புக்கு..

அபலையின் துயிலுரிதல்
போன்ற
அற்பச் செயல்கள்
அரங்கேறும் சபைகள்-
கௌரவ சபைகளாம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (31-May-17, 6:55 pm)
Tanglish : nalla peyar
பார்வை : 177

மேலே