இதயத்தில் சிறைவை

நான் அழகை
அளவாக ரசிப்பவன்
ஆனால் அன்பை
அளவில்லாமல் புசிப்பவன்
நெற்றி வியர்வையை நம்பியே
வாழ்பவன் நான்
நட்பின் வளையத்தை
சுற்றியே வளர்ந்தவன் நான்
நவரசம் பருகும்
காதல் அன்னப்பறவை
ஆதலால்
என்னை உன் இதயத்தில்
சிறைவை...

எழுதியவர் : செல்வமுத்து.M (1-Jun-17, 1:18 pm)
பார்வை : 200

மேலே