பிச்சையெனும் வாக்கு
வெள்ளாட்டு மந்தையில்
வெறிநாய் ஊளையிட்டு..
ஒப்பாரி வைத்து..
ஓட்டு கேட்டது..
ஒடுக்கப்பட்ட இனமும்..
ஒரு நொடி யோசிக்காது..
ஓட்டும் போட்டனர்...
கோமணத்துணியும்..
கோடித் துணியானது...
வாக்குச் சீட்டு..
வாய்க்கரிசி போட்டது...
ஓடியோடி உழைத்தவனுக்கு..
ஒத்த ரூபாயும் கிடைக்கவில்லை...
கொள்கை மறந்து..
கொடுத்த வாக்கும் துறந்து..
கோடிகள் குவித்து..
கோமானாகி விட்டான்...
பிச்சை யெடுத்தவன்
பிரபுவாகி விட்டான்...
பிச்சைப் போட்டவனும்
தேடிக்கொண்டேயிருக்கிறான்..
பிச்சை பாத்திரத்தை...
மீண்டும் பிச்சைப் போடுவதற்கு...
**********************
சிகுவரா
மே 2004