பயணம்

தாரா பல கொடுமைகளை அனுபவித்த போதிலும் அவளுக்கு கிடைத்த ஒரு ஆறுதல் அவள் கருவுற்றதுதான். அதை அறிந்த அவள் தந்தை மாணிக்கம் தாராவை பார்க்க வந்தார். அப்பொழுதுதான் அவளின் நிலையை அறிந்துகொண்டார். ஆனாலும் அவளுக்குத்தான் அறிவுரை கூறினார்.

தாரா நாம் இருப்பது கிராமம் ஆதலால் உன்னை நான் அழைத்து சென்றால் பலரும் பல விதமாக பேச வாய்ப்பு உள்ளது அதனால் உன் அண்ணன் திருமணம் தடைபட வாய்ப்பு உள்ளது. அதனால் நீதான் பொறுமையாக இருக்க வேண்டும் வேறு வழி இல்லை. என்று அவளை சமாதானம் செய்தார். ஆனால்

பொறுத்துக்க கொள்ளும் விஷயத்தை மட்டுமே பொறுக்க முடியும். மற்றவற்றை? தனது தண்டனிடம் கூற முடியாத விஷயத்தை என்ன செய்வது. தனது மனதிலேயே வைத்து புழுங்கினாள் யாரிடமும் கூற முடியாமல்.

தனது துன்பத்துக்கு வடிகாலாக தனது மகாவிடம் அனைத்து விஷயங்களையும் கொட்டினால். தாரா கருவுற்ற சமயத்தில் அவளது நாத்தனாரும் கருவுற்றாள் அதனால் தாராவின் கருவை அழிக்க முடிவு செய்து ஹேமா தன் தமயனிடமும் தந்தையிடமும் தாராவின் கருவை அழிக்க சொன்னாள் தாரா அதற்கு சம்மதிக்க மறுத்ததால் மூவரின் கொடுமையும் அதிகரித்தது.

இவளின் துன்பத்தை யாரிடமும் கூற முடியாத வகையில் தொலைபேசியை பூட்டியும் தாராவை வெளி ஆட்களிடம் பேச முடியாத வாறு ஒரு ரூமின் உள்ளே அவளை வைத்து பூட்டியும் வைத்தனர்.

வளைகாப்பு நாளும் வந்தது அன்றே நானாவின் உடல் நிலை குறித்து அனைவருக்கும் தெரியும் படி வலிப்பு வந்தது. அன்றுதான் மாணிக்கம் மற்றும் பலருக்கும் இவ்விஷயம் தெரிய வந்தது. அப்படியும் மகளை மீட்க நினைக்கவில்லை மாணிக்கம். மேலும் தவிக்கவிட்டார் அவளை...

எழுதியவர் : (1-Jun-17, 10:24 pm)
Tanglish : payanam
பார்வை : 55

மேலே