உன் நினைவுகளோடு

அப்பனும் ஆத்தாளும்
அறுத்து விட்டபோது
அரவணைத்தாய்...

மதியும் மானமும்
மறைகழண்ட போது
மனிதனாக்கி விட்டாய்...

சதியும் சறுக்கலும்
சம்மந்தியான போது
சாதனையாளராக்கினாய்...

பணமும் பதவியும்
வந்தபோது
அனாதையாக்கிவிட்டாய்...
அடுத்தவனுக்கு மாலையிட்டு
காதலுக்கு மரண தண்டனை
கொடுத்துக்கொண்டாய்...
ஏன்..? எதற்கு..?
எதனால்..? எப்படி..?
எதுவும் விளங்கவில்லை...


ஆயினும்
அனாதையாய்..
ஆயுள் தண்டனை
அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன்...
அந்தநாள் உன் நினைவுகளோடு..

****************
சிகுவரா
ஜூன் 2004

எழுதியவர் : சிகுவரா (1-Jun-17, 10:33 pm)
Tanglish : un ninaivukalodu
பார்வை : 165

மேலே