கவிக்கோ. அப்துல் ரஹ்மான் அவர்களுக்கான கண்ணீர் வரிகள்

இயற்கலைகள் பல வடித்திட்ட உம்விரல்கள் இன்று
இயல்மறந்து இயங்கமறுத்து உறங்கிவிட்டதே...!
வயல்வெளி புல்தரையில் இன்புற்று உறவாடும் மென்தென்றல்கூட
வாயடைத்து வசைபாடி இறைவனை ஏளனம்செய்து தூற்றுகின்றதே...!
விளைந்துநடக்கும் விருட்சங்களாய் உம் கவிதைகளெல்லாம் இன்று கலங்கிப்போய்
கலைந்துகிடக்கும் காகிதக் கம்பளமாய் காலடியில் கரைகின்றனவே...!
எழில்தமிழை எழுத்துக்களால் எழுதிட்ட நன்கவிஞரே இன்று
குழல்நாதம் கொஞ்சுவதை அறிஞன் நீரும் அறிவாயோ..?
( கவிக்கோ. அப்துல் ரஹ்மான் அவர்களுக்கான கண்ணீர் வரிகள் )