கவிக்கோவின் மரணம் ---முஹம்மத் ஸர்பான்

அதிகாலை பூக்கள்
என் வாசலில்
முகம் மாறிப் போனது
பனித்துளிகளில்
வான் நிலவும்
வாய் கொப்பளிக்கிறது
பாலைவனக் காற்று
என் சன்னலில்
ஓவியம் வரைகிறது
அழகான நதிகள்
குன்றுகளில் மோதி
காயங்கள் வாங்குகிறது
தொடு வானத்து
மேகக் கூட்டங்கள்
ஆழ்கடல் நுழைந்தது
மீன்களின் செதில்கள்
விரலைக் குத்தி
கவிதைகள் அழுகிறது
மூங்கில் காட்டில்
புல்லாங்குழல்கள்
சமாதிகளாகிறது
நட்சத்திரக் காட்டின்
மார்கழி மழையாய்
கஸல்கள் பொழிகிறது
எழுத்துக்களின் முன்
கனவுகளின் படகுகள்
பாற்கடல் மூழ்கியது
தாஜ்மஹால் ஒன்று
தரையில் விழுந்து
ஆயிரம் பூக்களானது
இதுவரை இறந்த
உலகக் கவிஞர்கள்
என் இல்லத்தில்
கவி விருந்துண்ண
வருவதாய் ஒரு கனவு
பித்துப் பிடித்த
மன நிலையில்
நான் அலைகிறேன்
பாற்கடல் கடந்து
வந்த ஒரு பறவை
என் காதுகளில்
ஒரு கவிஞனின்
மரணச் சேதி
சொல்லிப் போய்
மின்சார வேலியில்
கானலாகிப் போனது

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (2-Jun-17, 12:07 pm)
பார்வை : 113

மேலே