சிவசிவாய ஓம்

ஓம் நமச்சிவாய ஓம்
==================
சிவ சிவாய
நம சிவாய
சிவ சிவாய ஓம் ..
இதயத்திலே
நிறைந்திருக்கும்
சிவமயமே ஓம் ...
துன்பங்களை
கழைந்தெறிய
மனம் உருகுகின்றோம் ...
எங்கள் நிம்மதியை
காத்தருள
வேண்டி நிற்கின்றோம்....
சிவ சிவாய
நம சிவாய
சிவ சிவாய ஓம் ....!!
நன்மை செய்தும்
துன்பம் தாங்கும்
இதயம் தந்திடுவாயா ..??
பினி,பட்டினி,
துயரம் இல்லா
உலகை இனி படைத்திடுவாயா ..??
ஐந்தறிவுக்கு உள்ள
விசுவாசம், ஒற்றுமை
ஆரறிவுக்கும் கொடுத்திடுவாயா ??
பணம் ,பதவி மோகம் நீக்கி
குணம் ,பாசம் ,கருணை
பெரிதென உணர்த்திடுவாயா ??
செல்லும் செல்வம்
மறந்து, மரணம்
வெல்லும் உன் நினைவை
மட்டும் எங்களுள் விதைத்துடுவாயா ??
சிவ சிவாய
நம சிவாய
சிவ சிவாய ஓம் ....
(கடக்கும் காலம் ) கொடுத்தாய்
(மறக்கும் மனம்) படைத்தாய்
(அழியும் தேகம்) தந்தாய்
(தோல் சுருங்கும் உடலில்) மோகம் சேர்த்தாய்
ஆசை என்ற உணர்வில் ஆட்டி படைத்தாய்
உண்மை நிலை உணரச்செய்வாயா??
இறைவா...!!!
மனம் வேண்டி மன்றாடுகிறேன்
வரம் தருவாயா ..??
ஓம் நமச்சிவாய..??
என்றும் என்றென்றும் ...