கொல்லாமல்கொல்லுகிறாய்
மாலைநேரமலையடிவாரம்,
மரநிழலில், நீயும் நானும்.
மொட்டவிழ்வது போல் காதலை
நீ சொல்ல..
கட்டி என்னை அணைத்தது புரியாத
உணர்வு மெல்ல.
அனலை கக்கிய அக்னி இன்று
புனலாய் மாறிட புதிதாய் தவித்தேன்.
காதலோடு கண்ட உன் காந்தவிழியை காணமுடியாமல்
நான் தவிர்த்தேன்.
இரவு நீண்டதென இன்றுதான் நான் கண்டேன்.
நிலவை துணையாக்கிக்கதைபேசி
கொண்டேன்.
வைகரைபொழுதெனக்கு வசந்தமாய் அமையவில்லை.
கைதொடும் தூரத்தில் நீ
தொட்டுபார்த்தால் நிஜம் இல்லை.
சொல்லிவிட்டஇன்பத்தில் நீ...
கள்ளிப்பால் குடித்ததுபோல் நான்.
கத்தும் கடல் அலைபோல என் இதயம்
தான் இருக்க..
எத்தனை நாள் எண்ணிணாயோ என்
உறக்கத்தை இறக்கவைக்க..

