வெள்ளை சிலைகள்

வெள்ளை தாள்கள் எல்லாம்
வண்ண கவிதைகளால்
தங்களை அலங்கரித்து
பொட்டிட்டு புன்னகைக்கின்றன
இன்னும் ஏனோ இந்த
பொறுப்பற்ற சமுதாயம்
வெள்ளை சிலைகளுக்கு
வண்ணம் பூச மறுத்து
இருட்டுக்குள் அடைத்து வஞ்சிக்கிறது...
என்று தனியும் இந்த வெள்ளை
சிலைகளின் கண்ணீர் கோலம்...

எழுதியவர் : செல்வமுத்து.M (3-Jun-17, 9:41 am)
Tanglish : vellai silaikal
பார்வை : 90

மேலே