மனம் எனும் இவன்

இவன் விரும்பா செயல் ஒன்றை,
இவன் சொல் கேளாமல் நான்
இவன் சாட்சியாகவே - அதை
இவன் முன்னே செயலாற்றினேன்!

அதன் பலனாக தினம்! தினம்!
ஓர் யுத்தம் கொண்டு,
கத்தியின்றி! இரத்தமின்றி! -என்னை
குத்தி! குத்தி! சத்தமின்றி கொல்கிறான்.

( "மனம் எனும் இவன்" )

படைப்பு;
கவிக்குயவன்
செங்கை -603001
(03/05/17)

எழுதியவர் : கவிக்குயவன், செங்கை (3-Jun-17, 11:00 am)
சேர்த்தது : கவிக்குயவன்
பார்வை : 118

மேலே