சுமக்கும் காலங்கள்

வசந்த காலம் வந்தது - கூடவே
சுமக்கும் காலமும் வந்துவிட்டது
சுமைகள் குறைக்க யாருமில்லை
சுமக்காமல் படிக்கும் முறையுமில்லை
முதுகுக்கே இத்தனை சுமைகள்
இன்னும் மூளைக்கு எத்தனை சுமைகளோ
என்ன செய்யும் இந்த பிஞ்சு நெஞ்சங்கள்
எத்தனையோ ஏற்றங்கள்
இன்னும் இந்த சுமை குறைக்க
கல்விமுறையில் வரவில்லை மாற்றங்கள்...
பதைக்கிறது
பத்துமாதம் சுமந்த தாயுள்ளங்கள்
உங்களின் முதுகு சுமைகளை பார்த்து....

எழுதியவர் : செல்வமுத்து.M (3-Jun-17, 12:20 pm)
Tanglish : sumakkum kaalangal
பார்வை : 883

மேலே