வாழ்க்கைச் சக்கரம் சுழலட்டும் மனதில் மகிழ்வு நிலவட்டும்

இரு கரை தொட்டு நதி செல்லும்
தினம் வானில் ஞாயிறு வந்து செல்லும்
முகில் கூடும் மழை பூமி பெய்யும்
நிலம் எங்கும் நீர் ஓடி வழியும்
மலர் பூக்கும் வண்டு வந்து தேன் குடிக்கும்
இறை விதிப்பில் இவை யாவும் இங்கு நடக்கும்

உன் பிறப்பு உன் கையால் வருவதும் இல்லை
உன் தாய் வயிற்றில் நீயாகப் பிறப்பதும் இல்லை
விரும்பிய எதுவும் கிடைப்பதும் இல்லை
விதியை நினைத்தால் தீருமா தொல்லை
இன்று என்பது அது உன் கணக்கு
நாளை என்பது அது அறியாக் கணக்கு
இழந்ததை எண்ணிக் கவலை கொள்வது மடமை
இருப்பதைக் கொண்டு வாழ்ந்தால் அது அருமை
மனதின் கவலை யாவும் உடனே நிறுத்து
மகிழ்வை அணிந்து வரும் நாளை நடத்து

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (3-Jun-17, 12:26 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 136

சிறந்த கவிதைகள்

மேலே