உனக்காக

செய்து விட்ட பிழையை
மறவாது என் மனதை
கொள்வது முறையா...

கேட்டு விட்ட மன்னிப்பை
ஏற்காத உன் பிடிவாதம்
சரியா...

உன் கண்களின் தேடலும்
வார்த்தைகளை உதிர்த்திட
துடிக்கும் உதடுகளின் தவிப்பும்
போதுமடி...
நீ யாரென சொல்லிட...

பொய்யான கோபத்தை
உதறிவிட்டு வருவாயா...
காத்திருக்கிறேன் பெண்ணே
உனக்காக மட்டுமே...

எழுதியவர் : பாரதி (3-Jun-17, 12:41 pm)
சேர்த்தது : பாரதி கிருஷ்ணா
Tanglish : unakaaga
பார்வை : 170

மேலே