ஆண்களை அழகாக்கும் ஆயுர்வேத டிப்ஸ்

👦 ஆண்களுக்கு முழங்கை மூட்டுக்கள் எளிதில் கருமை அடைகின்றன. இதனைத் தவிர்க்க தக்காளிச் சாறு, தயிர், தேன், கடலை மாவு ஆகிய நான்கையும் கலந்து பேஸ்ட்டாக்கி, வாரம் ஒருமுறை இரண்டு கைகள் முழுவதும் தடவி வந்தால் கருப்பு நிறத் திட்டுக்கள் மறையும்.

👦 முகத்தில் உள்ள கறுப்புத் திட்டுக்கள் மறைய, தினமும் முட்டையின் வெள்ளைக்கரு எடுத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தினைக் கழுவ வேண்டும்.

👦 முட்டையின் மஞ்சள் கருவை (மூக்கை மூடிக்கொள்ளவும்) எடுத்து அதில் பாலாடையையும், பன்னீரையும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவிடவும். பிறகு இளஞ்சூடான வெந்நீரில் அலசினால் சில நாட்களில் தோல் மிருதுவாக மாறி பளபளப்பாக மாறிவிடும்.

👦 வெயில் காலங்களில் இறுக்கமான ஜீன்ஸ் அணிவதைத் தவிர்க்கவும்.

👦 முகம் புத்துணர்ச்சியாக இருக்க ஐஸ் கட்டிகளைக்கொண்டு முகத்தில் மசாஜ் செய்யலாம்.

👦 எலுமிச்சைச் சாறு மற்றும் உப்பு கலந்து அல்லது புதினா இலையை காய வைத்து அதனை தூளாக்கி இந்த தூளில் பல் தேய்த்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும்.

👦 ரோஜா இதழ்களை இரவிலேயே ஒரு பக்கெட் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் எழுந்து ரோஜாவில் ஊறவைத்த தண்ணீரில் குளித்தால், உடல் முழுவதும் நறுமணம் வீசும், உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.

👦 உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கவும், உடல் பொலிவாக இருப்பதற்கும் பழச்சாறுகள் துணைபுரிகின்றன. தினமும் இரண்டு அல்லது மூன்று பழச்சாறுகள் அருந்தி வந்தால், உடல் புத்துணர்வு அடைவதுடன் பொலிவும் கிடைக்கும்.

👦 முகம் பொலிவு அடைய, அரை கப் பப்பாளி பழம், ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தேன் ஆகியவற்றை கலந்து முகத்துக்கு பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

👦 சில ஆண்கள் சிகெரட் குடித்து உதடுகள் கருமையாக இருக்கும். அதனைப் போக்க பீட்ரூட் சாறு அல்லது புதினா இலை சாறு அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிகப்பாக மாறிவிடும்.

👦 கற்றாழை, உடல் குளுமைக்கும் தோல் பொலிவுக்கும் ஏற்றது.

👦 தலைமுடி நன்றாக கருகருவென்று வளர்வதற்கு நல்லெண்ணெய், விளக்கெண்னெய், தேங்காய் எண்ணெய் ஆகிய மூன்றையும் சமமாக எடுத்து தலைக்கு தேய்த்து ஊறிய பின்பு குளிக்க வேண்டும்.

எழுதியவர் : (3-Jun-17, 8:11 pm)
பார்வை : 83

சிறந்த கட்டுரைகள்

மேலே