மேகம் போடும் தாளம்

இலவம் பஞ்சி கூட்டமே !
இயல்பாய் நகர்ந்து செல்கிறாய் !
இலக்குதான் என்ன ?
போகும் தூரம் அறியாமல் :
போவதுதான் எங்கே ?

இரவும் வந்துவிட்டதே !
இரவில் ஒளிரும் நிலாவை :
இடைஞ்சல் செய்யாதே !

குறுக்கே வருவதால் :
கும் இருட்டில் இங்கு -
குழந்தையும் அழுகிறது !

இடி ஓசையில் நீ போடும் தாளத்தில் :
இயல்பும் மாறுகிறதே !
இதயமும் நனைகிறதே !

உன் தாளத்தில் நான் நனைய :
மாதம் மும்மாரி -
மறக்காமல் வந்துவிடு !
மகிழ்ச்சியை தந்துவிடு !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (5-Jun-17, 11:23 am)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
Tanglish : megam podum thaalam
பார்வை : 83

மேலே