ஏனடி என்மீது வீண் கோபம்
தேனே திரவியமே தெம்மாங்குக் குயில்மகளே
மானே மல்லிகையே மயக்கும் பொன்ரதமே
வானே உலவுகின்ற வட்டநிலா போன்றவளே
வீணே என்மீது வெறுப்பைச் சொரிவதென்ன
ஊனே கசக்குதடி உள்ளுடம்பு நோகுதடி
மீனே நதியாக மேனிதொட வேண்டுகிறேன்
தானே கனிந்துவிடு தளிர்க்காற்றாய் வீசிவிடு
ஆக்கம்
அஷ்ரப் அலி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
