அப்பா
![](https://eluthu.com/images/loading.gif)
புது உலகத்தை காண நான் வெளிவந்தபோது- இனி என்னுலகம் நீதான் என்று தூது பேசி வரவேற்றது அப்பாவின் விழியோர கண்ணீர்துளி...
அவரது தோள்கள் என் இரண்டாம் கருவறை...
அவரது அன்பு என் வாழ்வின் முதல் முன்னுரை...
பிஞ்சுவிரலை தொட்டு சிலிர்த்து எனை தூக்க பயந்து நெளிந்தவர்...
என்னோடே நடைபழகி என் ஓசைகளுக்கு மொழி தந்தவர்...
முதல்நாள்பள்ளியின் படியேற அழுகையோடு கையசைத்து வீடுதிரும்பியவர்...
தவறுகளை எல்லாம் அம்மா கோடிட்டுக் காட்டியபோதும் எனை அடிக்க மறந்தவர்...
என் இம்சைகளை ரசித்து என் பிடிவாதத்துக்கு விலைப்போனவர்...
சிக்குடைத்த என் கூந்தலுக்கு பின்னலிட்டு அழகுபார்த்தவர்...
என் கோபங்களில் சாம்பலாகி என் மௌன சிரிப்பில் பிழைத்தவர்...
திறமைகளை பாராட்டி என் கனவுகளுக்கு உயிரை கொடுத்தவர்...
வெட்கத்தை பூசிக்கொண்டு தாவணியில் நான் வந்து நிற்க, அப்போதும் என்னை குழந்தையாகவே பார்த்து சிரித்தவர்...
என் வேதனைகளை வாசித்து என் விலிகளை தொலைக்க செய்த வித்தைகாரர்...
எனக்காக ஒரு நாட்டை வாங்காத போதிலும் எனை இளவரசியாக வளம் வர வைத்தவர்...
உடைந்துபோன என் நம்பிக்கையை உறையவைத்த உத்தமர்...
அ...ப்...பா
எனக்காகவே உழைத்து தேய்ந்துபோன உங்க கைரேகையில் ஒளிந்துகொண்ட மகளின் ஆசை உங்க காலடியிலே இருந்து தேய்ந்துபோக செருப்பாகவே வேண்டும் என்பதே...