கற்சிலைக்கு பெயர் கடவுள்

இயங்கமறுக்கும் இதயத்தினை ஈரேழு உலகம்படைத்த இறைவன் இயக்கமுடியுமேயானால்
இறங்கி வரச்சொல்லுங்கள் ஒருமுறை குறைகூறிடும் என்நாவினை தீயிலிட்டு கொளுத்திக்கொள்கிறேன்...

பிழைகாணா சிற்றூர்களில் சிறுபான்மையினர் சிரம்தாழ சீரழிந்துகிடக்க காரணம்
சினம்கொண்ட சிலைதானென்றால்
விலைபேசியேனும் வலைவிரித்து களைத்தெரியவேண்டும் அசைவதற்குகூட வலிமையற்ற கற்சிலைகளை...

மங்கையிடம் மையல்கொண்ட மைந்தனொருவன் மயானத் தீயிற்கு இறையாகக் காரணம் மக்கிப்போன கடவுளின் கட்டளையென்றால்
கங்கைகொண்ட காசியில் அங்கம்தின்னும் அகோரிகளை துரோகிகளாக்கி தூக்கிலிட்டு பகலவனுக்கே படையலிடுங்கள்...

இயற்கை அதன் எழில்மேனியில் இதுவரை நம்மை சுமப்பதற்கே நன்றி சொல்வேன்
இயக்குபவன் இறைவன்தானென இன்றும் நீ கருதினால் இயலாதவனென்ற இழிசொல்லே அவனருகே நில் என்பேன்...

( கடவுள் என்பது ஒரு கற்பனைக் கதாபாத்திரமே தவிர, அதற்கென தனித்துவம் உண்டென தத்துவங்களை தவளவிட வேண்டாமே. எண்கணிதத்தை ஜாதகவடிவில் தரும் ஏமாற்றுக்காரர்கள், முற்றும் துறந்தவரென முத்திரைகுத்தி முகமூடியிட்ட மூடர்கள் என எங்கும் நிறைந்துதான் இருக்கிறார்கள் . எனைப் பொருத்தவரை இயங்குபவனே இறைவன் ஈன்றவரே கடவுள் )

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (6-Jun-17, 8:15 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 67

மேலே