தமிழனாய் பிறக்க நல் தவம் செய்திட வேண்டும்

எங்கெங்கிருந்தோ அடிக்கிறது தேசம்
தமிழன் என்பதால்....
பார்க்கின்றப் பார்வையில் ஏளனம்
பாவிகள்ப் போல் பாசாங்கு
தமிழன் என்ற அடைமொழியை சுமப்பதால்.....
நிர்பயாவிற்கு பொங்கும் தேசம்
நந்தினியை மறந்தது ஏனோ
தமிழன் என்று சொல்லிக்கொள்ள வெட்கி நாணுகிறேன்
நடிகனிடம் நாட்டை சமர்ப்பிப்பதால்
நல்ல தலைவர்கள் கண்ட என் தமிழ் தேசம்
நடிகனின் போலி பாசாங்கில் மயங்கி கிடகிறது.....
வடநாடு செழிப்பிற்குத் தாரை வார்க்க
தமிழ் தேசம்தான் அனைவரின் முதல் பார்வையும்....
தமிழன் என்ற அடையாளம் அழிக்கிறது -தமிழ் தேசமே
அம்மா அப்பா என்ற வார்த்தையை மறந்து....
இந்தியா என்ற தேசத்தில் தமிழ் மட்டும் அனாதை
வேற்றுமையில் ஒற்றுமைப் பள்ளி நூலில் மட்டும்
மனிதம் கலந்த மனங்களில் மதத்தை விதைக்கிறது
சாதிகளின் பிடியில் சிக்க வைத்து
பதவியை பற்றிக்கொள்ளும் தலைமை..

தமிழா தலை நிமிரு!!!
நம் தேசத்தை நம்மை தவிர - தலை
நிமிர்க்க ஆள் இல்லை...
காசுக்கு ஓட்டைத் தவிர்த்து - நல்ல
ஆட்சிக்கே என் ஒட்டு என்று உரக்கச் சொல்
தமிழையும் மதிக்கும் நம் தேசம்!!!!!
தமிழனாய் பிறந்து தமிழை கற்க
ஆசைப் பட்ட பல தலைவர்கள் வரலாறை நினைவில்க் கொள்!!
மனதில் மாற்றம் வேண்டும்
குனிந்தது போதும் நிமிர்ந்திடு!
தலை வணக்கும் கண்கள் நாம் நிமிர்வதைக் கண்டு....


-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (6-Jun-17, 7:36 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
பார்வை : 1610

மேலே