பணமில்லா வாழ்க்கை

பணமில்லா வாழ்க்கை...?

தன்மானம்..?

உணவுக்கும்..
உணர்வுக்கும்..
இடையேயான
வலிமிகுந்த
வரைமுறைகள்...

உணவு மட்டுமே
குறிக்கோள் அல்ல...

உணர்வு..
உறவுகளையும்
உணவாக்குகிறது..
பணமில்லா வாழ்க்கை...

பணத்தின் மதிப்பு..
மனித மனத்திற்கு
கிடைப்பதே யில்லை...

இரக்கம்..?
ஏமாறுவான்..
ஏமாளி...
என்ற புனைப்பெயருடன்..
ஏன் எப்பொழுதும்..?

கருணை..
கண்களில் கூட
கனபொழுதும் தெரிவதே யில்லை..
காரணம்..?

உப்பில்லா உணவும்
அமிர்தமே..
ஒரு வேளையாவது கிடைப்பின்...

நியமங்கள்..
நிலைப்பது கூட யில்லை
நினைவுகளில்...

ஒத்த ரூபாயையும்..
ஓயாது எதிர்ப்பார்க்கும்..
ஒவ்வாத உறவுகள்...

மானம் இல்லாதவனுக்கு
ஏது தன்மானம்..?

கெஞ்சி நிற்பதில்
கேடு ஏது..?

மிஞ்சும் அமிர்தம்..
வீணாக்கும்போது...
தெரிவதே யில்லை.
நாக்கின் சுவை...

அத்தியாச தேவை..
அநாவசியமானது...

அர்த்தமற்ற வார்த்தைகளுக்கும்..
அர்த்தம் தேடுகிறது..
ஆழ்மனம்...

நிழல்கள் கூட
நிற்பதில்லை..
நிலைக்குமோ..? – இந்த ஈன
நிலை...

வயிற்றுப் பசிக்காக
வாய்க்கரிசிப் போட்டுக்கொள்ள
வாய்ப்பே யில்லை...

ஆசைகள்..
அடங்குவதே யில்லை..
அடக்க நினைக்கும்போதெல்லாம்...


சந்தோசம்..
சுற்றி நின்றாலும்..
சாவு மேளம் கேட்கிறது...

ஏச்சும் பேச்சும்..
எத்தனை நாள்..
என்று தெரிவதே யில்லை...

பணமில்லா வாழ்க்கை

********************
சிகுவரா
ஏப்ரல் 15 ௨௦௧௭

எழுதியவர் : சிகுவரா (6-Jun-17, 6:02 pm)
சேர்த்தது : சிகுவரா
பார்வை : 1283

மேலே