தீவிரவாத விளையாட்டு

நீங்களெல்லாம் கூட்டமாய் கூடி உங்களுக்கென்று பெயரிட்டு அதுவே உங்கள் இனமென முழங்குங்கள்.
மற்றவர்களென்ன
சளைத்தவர்களா?
அவர்களும் ஆளுக்கொரு கூட்டம் கூட்டி அவற்றிற்கெல்லாம் பெயரிட்டு அதுவே அவர்களின் இனமென முழக்கமிட்டு போராடுவார்கள்...

இப்படியாக நடைபெற, ஆதிக்கக் கூட்டம் மற்ற கூட்டங்களை தீவிரவாதக் கூட்டங்களெனக் கூறி அழிக்க, மற்ற கூட்டங்களும் பொறுத்துக் கொள்ளுமா?
பொங்கி எழாதோ?

இப்படியாக மதம், இனமென பின்னணிகளுக்கிடையே சிக்கிய மனிதர்களெல்லாம் சிதைந்து போகிறார்கள் ஞானிலத்திலே...

அழிக்கப்படுவதெல்லாம் அப்பாவிகளே...

நாட்டை பாதுகாக்க போர்க்களம் செல்கிறார்கள், நாட்டுக்குள்ளே பல விஷக்கிருமிகள் நிரம்பிவழியும் நிஜம் அறியாமலே...

எங்கும் சென்று வர, யாருக்கும் தீங்கின்றி வாழ, இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கையில் எதற்காக அரசாங்கத்திடமும் அதிகாரிகளிடமும் அனுமதி பெற வேண்டும்?

அக்கிரமங்களே தலைவிரித்தாடும் உலகிலே அறியாமையால் நிறைந்த மனங்களே அதிகம்...
மனம் அறியாமையில் மூழ்கி இருக்கையில் மனச்சாட்சி எப்படி விழித்தெழும்?
சரியாக வேலை செய்யும்?

எத்தனை முறை எடுத்துரைத்தாலும் சிந்திப்பதே இல்லை...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (8-Jun-17, 12:10 am)
பார்வை : 443

மேலே