இயற்கை
எத்தனையோ ஆயிரம் ஆயிரம்
விநோதங்கள் படைத்தான் இறைவன்
அத்தனையும் கண்டு இன்புறுவாய்
என்று உன் கண் முன் வைத்தான்
பச்சை மா மலைகள் பனி மலைகள்
அவற்றில் உருவாகி பள்ளத்தாக்கை நோக்கி
ஓடி வரும் பல்லாயிர நதிகள்
பேரொளி எழுப்பி தாவி வரும் அருவிகள்
மாமலைகளுக்கு பெரும் போர்வைபோல்
பசுமரங்கள் தாழ் அடர் காடுகள்
காடுகளில் அலைந்து திரியும்
எத்தனை எத்தனை வினோத விலங்கினங்கள்
பலவர்ணத்தில் பறந்து திரியும் பறவை இனங்கள்
பாடும் பறவைகள், பேசும் பறவைகள்
இன்னும் ஆடும் பறவைகள்
பறப்பவை தவிர ஊர்வன
ஊர்வனவற்றில் நச்சு அரவங்கள்
இப்படி நிலத்தில் நாம் காணும் படைப்புகள்
ஆர்க்கும் அலைகள் கொண்ட மாக்கடல்கள்
அதில் குடி புகுந்து வாழும் மீன்கள்
நகர்ந்திடும் குன்றுகள் போல் திமிங்கிலங்கள்
இன்னும் பவளங்கள், முத்துக்கள் தரும்
வினோத சிப்பிக்குள் வாழும் உயிரினங்கள்
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்
இயற்கை நமக்காக படைத்த படைப்புக்களை
அத்தனையும் படைத்த இறைவன்
படைப்பை நிறுத்திவிடாமல்
படைப்பில் பெரும் தவறும் ஒன்று செய்த்துவிட்டான்
ஆறறிவு படைத்த மனிதனை படைத்தான்
விலங்கோடு விலங்காய் ஆதியில் திரிந்த மனிதன்
தன்னை மாற்றிக்கொண்டான்
பரிணாம வளர்ச்சியில் இன்னும் அவன்
மாறி கொண்டே இருக்கிறான்
இயற்கை எழிலை கண்டு ரசித்த பின்னும்
தனக்கு சாதகமாய் இயற்கையை மாற்றிவிட
இயற்கையோடு மறைமுக போர் செய்கின்றான்
காடுகளை அழிக்கிறான் மலைகளை வெடிகுண்டு
போட்டு வெடிக்கிறான் கற்களால்
பெருந்தனம் சேர்கிறான் இப்படியே போனால்
மலைகளும் காணாமல் போய்விடலாம்
வீடுகள் பல கட்டி நாடாக்க காடுகள்
பலவற்றை அழிக்கிறான்.....................
இப்படி இயற்கையை காக்க மறந்து
அழிக்கிறான் மனிதன் விலங்குகளோடு சேர்த்து
தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறான்
அவனுக்கு தெரியாது படைத்தவனுக்கு
அழிக்க தெரியாதா மனிதன் ஆணவத்தை
அழித்து அவனையும் அழிக்க தெரியாதா
இயற்கையோடு வாழ்ந்திட்டால் மனிதன்
வாழ்ந்திடலாம் ஆனால் போர் புரிய நினைத்தால்
இயற்கையை வென்றிடலாம் என்று நினைத்தால்
இயற்கை அவனை அழித்துவிடும்
அதுவே ப்ரளயமாகலாம்