ஏழை மாளிகை

கூரைகளின் கீற்றில்
முழுமதி அழகும், மழைகளின்
வரதட்சணையும் - எம்
ஏழை மாளிகையில்......

பல கனவுகளின் ஒய்யாரம்
மகிழ்ச்சிகளின் ஆரவாரம்
இசைக்கின்ற பூக்களின் தாலாட்டு

ஏக்கம் நிறைந்த வாழ்க்கை
சிறு உயிருக்கும் பாசம் பேதமில்லை
வீழ்கின்ற கணமும் வாழ்த்தும்
எங்கள் ஏழை மனம்.

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (9-Jun-17, 11:19 am)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
Tanglish : aezhai maalikai
பார்வை : 109

சிறந்த கவிதைகள்

மேலே