எங்கு போனார்கள் இந்த நாரிகள்

மாசிலா அழகிய முகம்
அதில் மஞ்சள் பூச்சு
நெற்றியில் குங்கும பொட்டு
வாரி பின்னிய கூந்தல் -அதில்
வாசம் வீசும் மல்லிகைப்பூ
மூக்கில் சிவப்பு மூக்குத்தி
காதில் பவளம் பதித்த கம்மல்
கழுத்தில் தங்க ஹாரம்
பொங்கும் பருவத்தை சற்றே மறைத்து
சிற்றிடை தழுவிய சிற்றாடை
நீண்ட மெல்லிய கால்கள்
நடந்தால் ஜதிப்போடும்
வெள்ளி கொலுசுகள்
மருதாணி வண்ணம் பூசிய
கைகள் கால்கள்; இப்படி
ஒரு இள மங்கையை
கவிதையில் தான் வடிக்க முடியும்
இன்றைய நாகரீக நம் நாட்டில்
நம் இனிய தமிழ் நாட்டில்; என்று
கூறினால் உங்களால் ஒரு கால்
நம்ப முடியாமல் போகலாம்
ஆனால் நான் கூறுவது
மிகையல்ல முற்றிலும் நிஜம்
இன்று கிராமத்திலும் கூட
மங்கையர்கள் பட்டணத்து
கன்னியர் போல் இருக்கணும்னு
நினைக்கிறார்கள்
போய்விடுமோ, மறைந்து போய்விடுமோ
நம் கலாச்சாரமும் பாரம்பரியமும் !
காலம்தான் இதற்கு பதில் தந்திடும் !,

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Jun-17, 12:13 pm)
பார்வை : 43

மேலே