மயக்குகிறாள் மயங்குகிறேன்

மாயமில்லை, மந்திரமில்லை!
மயக்கும் தன்மை என்னிடம் இல்லை!

மயக்கும் தன்மையை பெண்ணிடம் தந்து - என்னை
மயங்க வைத்தவன் எவனோ?

அதை காதல் என்று சொல்லவா - இல்லை
காமம் என்று சொல்லவா?
அவளுக்கு மயங்கிவிட்டேனே - இதை
பிழை என சொல்லவா?

இந்த மயக்கத்தில் தப்பியவன்
எவரேனும் உண்டா? - இல்லை
தப்பிக்க வழி ஏதும் உண்டா?

எழுதியவர் : மன்சூர் (12-Jun-17, 4:09 am)
பார்வை : 4961

மேலே