மணக்கும் மல்லிகை

மணக்கும்
மல்லிகையே நீதான்
அந்த
மலரில் இல்லையே
வாசம்.....மறவாதே
கண்மணியே
மரணிக்கும் வரை
நீதானே
என்
சுவாசம்.....!!

அழகுப் பூங்கொடி
என்னை நோகடித்துப்
பார்ப்பது
ஏனடி....?
உன்னைச் சேராமல்
சென்றுதொலையும்
ஒவ்வொரு
நாளும்
வீணடி.....!!

வானம்
இடி இடிக்க
மேகம்
தூறல்கள்
போடுதே.....மின்னலுக்கு
நீபடும்
இன்னல்கள்
கண்டு.....இவன்
ரசித்தும்
உண்டு.....அந்த
மின்னலை
சபித்ததும்
உண்டு.....!!

விளக்கணைக்கும்
வேளையில்
நீ தரும்
வெட்கங்கள்.....
அணைப்பில்
அணைந்துபோகுமே
அன்பாலே
கரைந்தோமே.....
அன்பே
மறக்குமா.....??

மாமன்
தோளில்
மணிக்கணக்கில்
தலை
சாய்ப்பாய்.....உன்
தூக்கம்
கெடாமல்
தவித்துக்
கிடப்பேனே......!!

எழுதியவர் : thampu (12-Jun-17, 2:15 am)
Tanglish : manakkum mallikai
பார்வை : 248

மேலே