உறவே பிரிவாகி
" அம்மா .நீ வாயை மூடிக்கொண்டு இருக்கியா?பொண்ணுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் நடக்கப் போகுதே...அது நல்லபடியா நடக்கணுமே என்கிற எண்ணம் கொஞ்சமாவது உனக்கிருக்கா?
உலகத்திலேயே மோசமான அம்மாவா நீ தான் இருப்பே!"
பொரிந்து தள்ளிக் கொண்டிருந்த வினயா தன் தாய் மரகதத்தை மறு வார்த்தை கூடப் பேச விடவே இல்லை.
மரகதமும் விடுவதாயில்லை.கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் சும்மாவே தண்ணீராய் செலவழிகிறதே.
ஒரு தேவை என்றால் யாரிடம் போய்க் கையேந்துவது..கடன் வாங்கியாவது ஆடம்பரக் கல்யாணம் எதற்கு?
கல்யாணமே தடைபட்டால்?
செலவழிந்த பணம் ...மானம் மரியாதை எல்லாமும் போகுமே.
மறுபடி கல்யாணம் என்று தலை நிமிர்ந்து சொல்ல முடியுமா.?ஒழுங்காக பதிவுத்திருமணம் முடித்துவிட்டு...திருப்பதியில் தாலி கட்டி ஒரு நல்ல ஹோட்டலில் நூறு பேரை அழைத்து விருந்தளித்தால் போதுமே.பணமும் நேரமும் மிச்சமாவதுடன் 'மானம் மரியாதை போகுமே ..தப்பித் தவறி தடை வந்துவிட்டால்.._.என்ற பயமும் குறையுமே... என்ற வாதம் மரகதம் கூறுவது.
ஒரு வகையில் அதுவும் சரியே.
மாறிக் கொண்டே இருக்கும் மனம் வினயாவுக்கு. பள்ளி இறுதியில் சக மாணவனைக் காதலித்து...அவன் ஒத்துவரமாட்டான் அவன் குணம் பிடிக்கவில்லை என்று சொல்லி விலக்கி .
இன்னொருவனை அவன் பெண் நீ அடக்கமாக இரு.பிற ஆண்களுடன் பேசாதே , பழகாதே என்றதில் பிடிக்காமல் போய்....
இன்னும் ஒருவனை- பொறுப்பற்றவன் , வேலைக்குப் போக மறுக்கிறான் என்ற காரணம் சொல்லி விலக்கி...
இதே போல் இப்போது மணம் புரிய இருக்கிறவனையும்...குறை கூறி...பிடிக்கவில்லை என்று திருமணமான ஒரு வருடத்திற்குள்ளேயே பிரித்துவிட்டால்...காதலும் கல்யாணமும் என்ன பொம்மை விளையாட்டா ..பொம்மைகளை மாற்றுவது போல மாற்றிக் கொண்டிருக்க....
இந்த கவலைதான் மரகததத்திற்கு.
அதை கேட்கவும் கேட்டுவிட வினயாவுக்கு வந்த கோபத்தில் பேசிய வார்த்தைகளே...மேலே பொரிந்து தள்ளியவை.
அதற்காக இன்னொரு பிள்ளையின் வாழ்க்கையில் விளையாட விடலாமா..என்ற தார்மீகப் பொறுப்பில்...
தான் மாப்பிள்ளையிடம் பேச விரும்புவதாக மரகதம் கூற...
தாயின் மேல்தீராத கோபம் உண்டாயிற்று வினயாவிற்கு!
ஒருவேளை தன் தாயே தன் திருமணத்திற்கு தடையாகி விட்டால்?
இவரையும் இழந்து தன் சுயத்தின் முன்னேயே தான் கேலிப்பொருளாகிவிடுவோமோ?
என்ற அச்சம் அவளை சில முடிவுகளை எடுக்க வைத்தது..
" அம்மா ..நீ என் திருமணத்திற்கு வராதே.மாப்பிள்ளையின் மனதை நீ கலைத்துவிடுவாய்.
என்னுடன் அனுசரித்து வாழ நீ என்ன அறிவுரை தருவது.உன் மகளைப் பற்றி நீயே குறைகள் சொல்வாயா? அவர்களின் ஊருக்கே சென்று ..அவர்கள் செய்யும் முறைப்படி கல்யாணம் செஞ்சிக்கறேன்.நீ மட்டும் என் திருமணத்திற்கு வந்துவிடாதே"
என்று வினயா முகத்தில் அடித்தாற் போலச் சொல்லிவிட...
அங்கே ஒரு அம்மா - மகள் உறவுமுறை...ஊசலாட்டம் கண்டு உருத்தெரியாமல் அழிய ஆரம்பித்திருந்தது.
இதில் யார் மேல் குறை.?
இப்பபோதைய இளைய தலைமுறை ஆலோசிப்பதில்லை!!.மனம் மாறிக் கொண்டே ...
வாழ்நாள் முழுவதும்- ஊசலாட்டத்திலும் ...அல்லது ஒரேயடியாய்ப் பிரிவதிலும்......!!!
காலமும் வாழ்வுமே இதற்கு பதில் சொல்லும்.!!!
நல்லதே நடக்கும் என்ற பிரார்த்தனையோடு நாம் காத்திருப்போம்..பார்த்திருப்போம் !!!!