ஆசான்

ஏற்றம் தந்தாய் வாழ்வில் மாற்றம் தந்தாய்,
தாயாய் மாறி பாசமும் தந்தாய்.
வரலாறு புகட்டி வரலாறு படைக்க செய்தாய்,
ஆங்கிலம் கற்பித்து அங்கீகாரம் தந்தாய்,
தாவரங்களின் மொழி அறிந்தேன் தாவரவியலில்,
பிற உயிர்கள் மீது பாசம் கொண்டேன் உன் விலங்கியல்,
இரசாயன சாஸ்திரம் அறிந்தேன் உன் வேதியியலில்,
இயந்திரம் அறிந்தேன் உன் இயற்பியலில்,
வாழ்க்கை கணக்கு அறிந்தேன் கணினியில்,
என்னை உணர்ந்தேன் உன் தமிழில்.
நன்றி பல கட்டி கூறினும்
உன் சேவைக்கு ஈடேது.

எழுதியவர் : கமலப்பிரியா (14-Jun-17, 6:08 pm)
சேர்த்தது : கமலப்பிரியா
Tanglish : aasaan
பார்வை : 182

மேலே