உயர்ந்த மனிதன்- அவன் நட்பே சாட்சி
அது ஓர் போர்க்களம்
வீரர்கள் ஒருவரை ஒருவர்
அழிப்பதில் பேரார்வம் காட்டினார
இறந்த வீரன் உடலை
உரு தெரியாது சிதைக்கும் எதிரிகள்
அந்த போர்க்களத்தில் எதிரி ஒருவன்
குண்டுக்கு அடிபட்டு இறக்கும் தருவாயில்
தாகம் தாகம் தண்ணீர் தண்ணீர் என்று
ஈனக்குரலில் கேட்கின்றான் -அதோ
அதை கேட்டுவிட்டான் எதிரி வீரன் ஒருவன்,
இவனை நோக்கி ஓடி வருகிறான்
இவன் நினைக்கிறான் தன்னை
சுக்குநூறாக்க வருகிறானோ என்று
வந்த வீரன் இவன் தலையை தன்
மடி மீது சாய்த்து தன் கையில்
தன் தாகம் தீர்க்க வைத்திருந்த
நீரை அந்த வீரன் வாயில் மெல்ல மெல்ல விடுகிறான்
தாகம் தீர்ந்த வீரன் இவனை நோக்க
இவன் அவனை நோக்க இருவர் கண்களிலும்
நீர் பெருகுகிறது ஆறுபோல் -இவன் கைகள்
அவன் கைகளை குலுக்க -எதிரிகள்
போர்க்களத்தில் நண்பர்கள் ஆகின்றார்
அடிபட்ட நண்பன் உயிர் இல்லை பகை வீரன்
உயிர் உடலைவிட்டு போகிறது
நீர் கொடுத்த பகைவீரன் கண்ணீர்விடுகிறான்
உடலை கீழே வைத்து அஞ்சலி செலுத்துகிறான்
'பகை நண்பனுக்கு'!
இப்படி பிறந்தது ஒரு நட்பு !
அந்த கடைசி குவளை நீர் இவர்கள்
நட்பிற்கு சாட்சி -பகைவர்களும் பகை மறந்து
நண்பர்கள் ஆயினர் ; பகைவனும்
மனிதன் தான் என்றாயிற்று
பகைவன் உயர்ந்த மனிதன் ஆகின்றான்
இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான்
செய்கிறார்கள் உயர்ந்த மனிதர்கள் !