அன்பு பைத்தியம் ஏதோ புலம்புகிறது
அன்பு கொண்டவன் வேட்டையாடப்படுகிறான் அன்பில்லா மனிதனாலே...
இதில் நண்பனென்ன?
உடன்பிறந்த சகோதரரென்ன?
ஞானப்பெண்ணே...
கோபத்திற்கு அடிமையானவன் மற்றவரின் கோபத்தைத் தூண்டுகிறான்..
காமத்திற்கு அடிமையானவன் மற்றவரின் காமத்தைத் தூண்டுகிறான்...
பண்பற்ற பேச்சும், அறிவற்ற செயலும் அன்பில்லாமையின் வெளிப்பாடென அறியாயோ?
ஞானப்பெண்ணே...
சுற்றி பகைவந்த போதிலும் நெஞ்சில் பகைமையின்றி சிங்கமாய் கர்ஜிக்க முதுகில் குத்திய இரத்தத்தின் இரத்தம்,
கண் கோபம் கொள்ள முறைத்த நேரம், முன் முழங்காலிட்டு தன்னுயிர் காக்க வேண்டவே, கொல்லாது தன்னுயிரைத் தன்னுடல் விட்டுப் போக்கிக் கொண்ட அந்த அன்புள்ளத்தின் கால் தூசிக்குக் கூட நாம் சமமாகமாட்டோம் ஞானப்பெண்ணே...
கற்றறிந்தோமென்ற மமகாரம், பணத்தால் கொண்ட மமகாரம், உடல் பலத்தாலே கொண்ட மமகாரமென எதுவாயினும் மமகாரத்தால் உண்டாவது நாசமே...
வாக்கு சித்திக்கும, உள்ளத்தூய்மையாலே...
வாழ்க்கை முழுமை பெறும் உள்ளன்பாலே...