அக்கினித் தடாகம்

கல் எறிந்தால்
நீரலை வட்டம்
சொல் எரிந்தால்
அக்கினித் தடாகம் !

பூ மலர்ந்தால்
தோட்டம்
புரட்சி மலர்ந்தால்
போராட்டம் !

தலை நிமிர்ந்தால்
எழுச்சி
தலைகள் உருண்டால்
பிரஞ்சுப் புரட்சி !

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jun-17, 9:57 am)
பார்வை : 604

மேலே