காற்று வெளியிடை
காற்று வெளியிடை
கடந்து செல்கின்றேன்
பரந்த கானகத்தின் நடுவே...
பாரில் எங்கும்
பரவி கிடக்குதம்மா
எங்கள் கானக்குரல்களும்...
சேர்ந்து விட்ட குழல்
காடுகளும்
பல சங்கதிகள் சொல்லுதம்மா...
அந்தி மலர்ந்திட
தென்றல் வருடிட
திங்கள் எழும்புதம்மா...
எட்டு திக்கு பரவிய
எங்கள் இனமோ
ஒன்றாய் கூடுதம்மா...

