குறுங்கவிதை -- எண் சீர் விருத்தம்
இரசாயன உலகம் -- குறுங்கவிதை --- எண்சீர் விருத்தம்
செயற்கைதனைப் புகுத்திடுவர் உலகினிலே பாரீர் !
----- செழிப்பெல்லாம் சிதைந்துவிடும் சீர்கெடுமே காணீர் !
இயற்கைதனைப் பேணிடாமல் வாழ்வதனால் இஃதே !
------ இன்பங்கள் கிட்டவில்லை இனித்திடுமா வாழ்வே !
தயக்கங்கள் வேண்டாமே தாபிப்போம் வாரீர் !
------ தழைக்கட்டும் செந்நெல்லும் தரிசுகளும் சேர்ந்தே !
மயக்கங்கள் ஏன்தானோ மண்மீதில் என்றும்
------ மாற்றங்கள் தந்திடுவோம் மலரட்டும் கேளீர் !
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்