நொடிப்பொழுது இருட்டு
ஒற்றை நொடி
இருட்டு வெளிச்சமிடுகிறது
என்னை எனக்கே..
சமுதாயத்திற்காக
போட்டுக் கொண்ட
ஒழுக்கமெனும்
சட்டைக்குள் கிடந்து
அரிக்கிறது
அழுக்கு மேனி..
நொடிப் பொழுது
இருட்டில்
கைக்குழந்தையின்
காதணிகளில்
கை வைக்கயில்.,
கடைக்காரனின்
கள்ளா பெட்டியை
குறிவைக்கையில்.,
எதிரியவன்
முதுகில்
ஈட்டி பாய்ச்ச
முயல்கையில்.,
எதிர் நிற்கும்
அவள் மேல்
கை போட
எத்தனிக்கையில்.,
செவிட்டில்
அறைகிறது-எங்கோ
கேட்ட வரிகள்
"யாரும் பாக்கலனா
எல்லாரும் திருடங்கதான்"